ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

முதல் கதை





உலகத்தமிழர்களின் முதல் கதையான காக்கா கதையிலேயே நானும் தொடங்கறேன்.


ஒரு ஊருல ஒரு நரி வடை சுடும்போது ஒரு ஆயா பறந்து வந்து வடைய திருடி......

அடச்சே.... ஆரம்பிக்கும்போதே ஒளர்றனே....

சரி... சரி... இலக்கியம்ன்னா அப்படித்தான்... கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும்.

அதுவும் நான் எழுதுறது... இல்ல இல்ல படைக்கிறது ஒலக இலக்கியமில்ல...
அதனால எதுவுமே தப்பில்ல.

அடுத்த டேக் போகலாமா...

ஒரு ஊருல ஒரு ஆயா (ஆமா.. ஆயாதான். பாட்டியெல்லாம் இல்ல) வடை சுட்டுச்சாம்.
அதுல ஒரு வடைய ஒரு காக்கா திருடிக்கிட்டு போய் ஒரு மரத்துக்கு மேல உக்காந்துதாம்.
அது வடைய சாப்பிடலாம்னு இருக்கும்போது அந்த பக்கம் வந்த நரி வந்துதாம்.
அது காக்காவ பாத்து ஒரு பாட்டு பாட சொல்லுச்சாம். காக்கா பாடறதுக்காக வாய தொறக்கறதுக்கு முன்னாடி வரையிலும் அது வாயிலதான் வடை இருந்துதாம்.

இத்தோட கதைய நிறுத்தினாதான் அது இலக்கியம்...

வடை கீழ விழுந்துடுச்சாம்... நரி எடுத்துக்கிட்டு ஓடிடுச்சாம்ன்னு சொன்னா அது சாதாரண கதை...

இதே கதையில ஆயா வடை சுடுறத மட்டும் சொல்லி காக்காவுக்கு இதை பாத்ததும் ஞானம் வந்ததுன்னு சொன்னா ஜென் கதை.

நான் முதல்ல ஒளறுனதுதான் பின் நவீனத்துவ இலக்கியம். ஒருத்தனுக்கும் ஒரு மண்ணும் புரியாம இருக்கனும்.

இவ்வளவுதாங்க இலக்கியத்துக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்...

இலக்கியத்துல என்ன ஒரு வசதின்னா அத படைக்கிறவங்களுக்கு எப்போ கை வலிக்குதோ அத்தோட நிறுத்திக்கலாம். மிச்ச சொச்சத்த படிக்கறவங்களே முடிவு பண்ணிப்பாங்க. மேல சொன்ன கதையில நீங்க எங்க படிக்கிறத நிறுத்தினாலும் அது இலக்கியமா மாறிடும்.


ஆனா இதே கதைய சொல்லி இதுல இருந்து நமக்கு என்ன தெரிய வருதுன்னு கேட்டு

1) ஏமாற்றாதே.. ஏமாறாதே..

2) வடைய சுட்டா மூடி வைக்காம திறந்தமேனிக்கு வைக்காதே

3) வடையை திருடினால் சாப்பிடாமல் நேரத்தை வீணாக்காதே

4) மரத்துக்கு மேலே உக்காந்து வடை சாப்பிடாதே

5) சாப்பிடும்போது பேசாதே, பாடாதே

மற்றும் இன்னும் பல "தே" க்களை சொல்லி நம்ம கழுத்தறுத்தாஅதுதாங்க பாடப்புத்தகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக