ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நாலாவது தமிழ்



இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழ் தவிர்த்து நாலாவது தமிழ் ஒன்று உள்ளது. அதுதான் மற்ற பகுதி மக்களால் கேலி, கிண்டல், பகடி இன்னும் என்னென்ன நக்கல் வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் செய்யப்படும் "மெட்ராஸ் தமிழ்" அதாவது மெட்ராஸ் பாஷை.

எல்லா தமிழ் சினிமாக்களிலும் வரும் கடை நிலை பாத்திரங்கள் இந்த பாஷைதான் பேசுவார்கள். எனவே இது எப்போதுமே கேலிக்குறிய தமிழ்தான்.

உண்மையில் மெட்ராஸ் தமிழ் சுத்தமான தமிழ் வார்த்தைகளை சற்று இழுத்து, வளச்சி அமுக்கி ( இழுத்து வளைத்துஅழுத்தி) பேசப்படும் தமிழ்.

இதில் எல்லோரையும் வா, போ என்றுதான் சொல்லுவாங்க. அது மரியாதை குறைவு கிடையாது. நீ எனக்கு மிகவும் நெருங்கிய நபர் என்று அர்த்தம்.

குந்து, தின்னு, சோறு என்றால் கேவலம். உட்கார், சாப்பிடு, சாப்பாடு அல்லது 'ரைஸ்' என்றால் அது ஒசத்தி.

ஆனால் எனக்கு இந்த நாலாவது தமிழ்தான் நன்றாக வரும்.

எனவே எனது எழுத்து இந்த நான்காம்... இல்ல.. இல்ல... நாலாவது தமிழ்லதான் வரும்.

அதெல்லாம் சரி . சம்மந்தமே இல்லாம எதுக்கு இந்தியா மேப்ன்னு பாக்கறிங்களா?

இந்திய சாலை வழியா பயணம் போனா (நடந்து இல்ல.. ஏதாவது மோட்டார் வண்டியில) ஒவ்வொரு மூணு மணி நேரத்துக்கும் மக்களோட வட்டார மொழி, உணவு, வாழ்க்கை முறை, சடங்குகள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கும்.

அடுத்த முறை போகும்போது கவனிங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக